티루 쿠라를 382

뽀비키니비키니뽀2026.02.11
조회13



Parimelazhaga: 왕의 본성 - 왕에게 자연스러운 것;

두려움 없음, 관대함, 지혜, 이 네 가지 자질이야말로 왕의 본성이다. (격려란 행동으로 이끄는 정신적 각성이다. 이 중 지식은 여섯 가지 감각 모두에 내재되어 있고, 관대함은 군대에 내재되어 있으며, 나머지는 행동에 내재되어 있다. 삶의 자질 중 하나가 나타나면 다른 것들은 억제된다. 만약 이 네 가지가 억제되어 왕에게 해가 된다면, 그것들은 항상 나타나야 한다. 그는 '왕의 본성은 불멸하는 것이다'라고 말했다.)

M. 바라다라사나: 두려움 없음, 관대함, 지식, 그리고 열정은 부족함이 없는 네 가지 자질이다.

마나쿠다바: 두려움 없음, 관대함, 지식, 그리고 열정은 부족함이 없는 네 가지 자질이다.

M. 카루나니디: 용기, 자비, 지혜, 그리고 높은 목표를 향한 노력은 통치자의 자질인 네 가지 자질이다.

풀리유르 케시크: 두려움 없음, 가난한 자에 대한 관대함, 지식, 그리고 격려는 통치자의 타고난 자질이어야 한다.

솔로몬 파파이아: 불의와 적을 두려워하지 않고, 도움이 필요한 자에게 베풀며, 이를 예방할 지식을 갖추고, 위험에 처한 후에도 흔들림 없이 격려하는 것, 이 네 가지 자질이 통치자의 타고난 자질이어야 한다.

나마칼 카빈자르: 두려움 없음, 가난한 자에 대한 연민, 통치에 필요한 법률 지식, 그리고 흔들림 없는 노력은 왕이 갖춰야 할 자질이다.

티루쿠랄라르 V. 무니사미: 통치자에게 타고난 네 가지 자질은 두려움 없음, 관대함, 지식, 그리고 격려이며, 이러한 자질들은 항상 갖추어야 한다.

시바요기 시바쿠마르: 왕의 본성은 두려움 없음, 타인을 돕는 마음, 지식, 그리고 열정, 이 네 가지 자질을 모두 갖추는 것이다.

----------------

----------------
자세히
의견 보내기
திருக்குறள் - 382
=======================
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 39.இறைமாட்சி

குறள்: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு

வாசிப்பு: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
--------------

பரிமேலழகர்: வேந்தற்கு இயல்பு- அரசனுக்கு இயல்பாவது;
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை- திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல் என்றவாறு.
(ஊக்கம், வினை செய்தற்கண் மனஎழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்; அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பலவாமாகலின், இவை எப்போதும் தோன்றிநிற்றல் வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)

மு.வரதராசனார்: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

மணக்குடவர்: அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

மு.கருணாநிதி: துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்

புலியூர்க் கேசிகன்: அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்

சாலமன் பாப்பையா: அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

நாமக்கல் கவிஞர்: பயமில்லாத தன்மை, ஏழைகளுக்கு இரங்கி தானம் கொடுத்தல், அரசாட்சிக்கு வேண்டிய சட்டதிட்ட அறிவு, விடா முயற்சி ஆகிய இந்த நான்கும் நிறைந்திருக்க வேண்டியது அரசனுக்கு வேண்டிய தகுதி.

திருக்குறளார் வீ.முனிசாமி: வேந்தர்க்குஇயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும்.

சிவயோகி சிவக்குமார்: அச்சம் கொல்லாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், ஆர்வமுடன் செயல்படுதல் ஆகிய நான்கும் குறைவின்றி இருப்பதே அரசருக்கு இயல்பு.

----------------