본문 바로가기
책갈피

티루쿠랄 ! 무료앱

주작이냐 |2026.01.07 09:52
조회 18 |추천 0
திருக்குறள் - 1006
=======================
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 101.நன்றியில் செல்வம்

குறள்: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

வாசிப்பு: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண்டு ஆயினும் இல்.
--------------

பரிமேலழகர்: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு= பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையர் அல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்= பலவாகிய அடுக்கிய கோடி பொருள் உண்டாயினும் ஒன்றுமில்லை.
(இன்பத்தினும் அறம் சிறந்தமையின் கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்பது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றும் இல்லார்போலப் பயன் இரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)

மு.வரதராசனார்: பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

மணக்குடவர்: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

மு.கருணாநிதி: கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை

புலியூர்க் கேசிகன்: இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை

சாலமன் பாப்பையா: தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

நாமக்கல் கவிஞர்: பிறருக்குக் கொடுப்பதோ தாம் அனுபவிப்பதோ இரண்டுமில்லாதவர்கள், கோடி கோடியாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை.

திருக்குறளார் வீ.முனிசாமி: பிறர்க்கு ஈகை செய்வதும் தாம் நூகர்வதும் ஆகிய இரண்டு செய்கையும் இல்லாதவர்களுக்குப் பலவாக அடுக்கிய கோடிப்பொருள் உண்டாயினும் பயன் ஒன்றும் இல்லையாம்.

சிவயோகி சிவக்குமார்: கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து செல்வம் கோடி உண்டாயினும் வீண்.

----------------
티루쿠랄 - 1006
==========================
발: 물질적 팔
윤리: 시민의식
권위: 101. 감사의 부

노래: 주지 않으면서도 주는 자들, 그러나 돈은 많은 자들

읽기: 주지 않으면서도 주는 자들, 그러나 돈은 많은 자들, 그러나 가진 것은 아무것도 없는 자들.

-------------

파리멜라자가: 주지 않으면서도 주는 자들, 그러나 돈은 많은 자들, 그러나 가진 것은 아무것도 없는 자들.

(쾌락 속에서, 미덕과 탁월함을 베푸는 것은 직업에 의해 예고된다. '아두키야 코티'는 소유물로 여겨지는 것을 의미한다. 마치 아무것도 없는 것처럼, 이익과 손실 모두 '안에' 있다고 말한다.)

M. 바라다라사나르: 남에게 베풀지 않고 남을 돕지 않으며 스스로를 소비하지 않는 사람은 수억 원의 재산이 불어났다 하더라도 아무런 이득이 없다.

마나쿠다바바르: 남에게 베풀지 않고 스스로를 소비하지 않는 사람은 수억 원의 재산이 있다 하더라도 아무 소용이 없다.

M. 카루나니디: 베풀고 돕는 성품이 없는 사람에게는 수억 원의 재산을 축적한다 해도 소용없다.

풀리유르 케시크: 가난한 이에게 베풀고 재산을 낭비하는 습관을 잃어버린 사람에게는 수억 원의 재산이 있다 해도 소용없다.

솔로몬 파파이아: 어려운 이에게 베풀지 않고 자신만 즐기는 사람에게는 수억 원의 재산이 있다 해도 소용없다.

나마칼 시인: 남에게 베푸는 마음과 스스로 즐기는 마음, 이 두 가지를 모두 갖추지 못한 사람에게는 수억 원의 재산이 있다 해도 소용없다.

티루쿠랄라르 V. 무니사미: 남에게 베푸는 마음과 스스로 즐기는 마음, 이 두 가지를 모두 갖추지 못한 사람에게는 수억 원의 재산이 있다 해도 소용없다.

시바요기 시바쿠마르: 주는 것과 그것을 즐기는 것을 모르는 사람에게는 아무리 많은 재산이 있어도 소용없다.

----------------










추천수0
반대수0

공감많은 뉴스 시사

더보기

뉴스 플러스