본문 바로가기
책갈피

...673번째 , 자원,,행동

뽀비키니비... |2026.01.25 13:25
조회 14 |추천 0
티루쿠르알 - 673
=======================
팔: 자원의 팔
이얄: 관리술
아디가람: 68. 행위의 종류

쿠랄: 옥룸바야 옐람 비나인다레 올라칼
셀룸바야 노키치 세일

읽기: 옥룸바야 옐람 비나인다레 올라칼 셀룸바야 노키치 세일.
--------------

파리멜라자카르: 옥룸 바이 옐람 비나인다루= 행위를 하라면, 가능한 모든 곳에서 바르게 행하는 것이 좋다; 옥라칼 셀룸 바이 노키치 세일= 그것이 불가능한 곳에서는 세 가지 방법을 통해 그것을 마무리하는 방법으로 행하라.
(가능한 곳은 전쟁터만큼 힘든 때다. 그 어려움에 대한 징계가 좋다고 하였으며, 두려움은 그에 의한 것이다. 불가능한 장소에서는 조화로운 시기이며, 그 두 시기가 자연의 차이로서 그것을 마무리하는 방법으로 행하라는 것이다. 이로 인해 강함, 같음, 약함이라는 세 상태가 생기며, 그 중 강한 것이 중요하다.)

무. 바라타라사나르: 가능한 곳에서는 모든 행위를 완수하는 것이 좋으며, 불가능한 경우 용이한 곳을 향해 행해야 한다.

마나쿳다바르: 가능한 곳에서는 행위를 하는 것이 좋다: 어려운 때라면 그것을 생각하며 가능한 곳을 보고 행하라. 이것은 행위를 끝내지 못했다거나 경시하지 말고 나중에 시기를 보고 행하라는 의미다.

무. 카루나니디: 가능한 곳에서는 모든 행위를 완수하는 것이 좋다. 불가능한 경우 그에 걸맞은 방법을 알고 행위의 완성을 이루어야 한다.

퓰리우르 케시간: 행할 수 있는 모든 곳에서 행위를 하는 것이 유익하다; 행하기 어려울 때 그것을 완수하는 적합한 방법을 탐구한 후에 행해야 한다.

살라만 바파이야: 하나의 행위를 할 때 삼, 단, 배타, 단담이라는 네 방법 중 단담 방법으로 하는 것이 좋다. 그것이 효과가 없으면 다른 셋 중 한 가지로 행하라.

나마칼 가빈가르: 자려 하던 일도 예상치 못한 좋은 기회가 오면 즉시 행하는 것이 좋다. 그 기회가 없을 때는 미리 생각하여 기회를 기다리며 자야 한다.

티루쿠르알라르 비. 무니스아미: 일할 때 가능한 곳에서는 단담, 즉 전쟁 같은 방법으로 하는 것이 좋다. 그것이 불가능하면 다른 방법으로 하는 것이 좋다.

시바요기 시박쿠마르: 할 수 있는 것은 모두 선을 위해 행하라. 불가능한 것은 완수할 방법을 알아 행하라.

----------------திருக்குறள் - 673
=======================
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 68.வினை செயல்வகை

குறள்: ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

வாசிப்பு: ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.
--------------

பரிமேலழகர்: ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்று= வினைசெய்யுங்கால், இயலும் இடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல்= அஃது இயலாவிடத்து, ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயநோக்கிச் செய்க.
(இயலுமிடம், பகையில் தான் வலியனாய காலம். அக்கலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலி்ன். இயலாவிடம் ஒத்தகாலமும், மெலியகாலமும். அவ்விரண்டு காலத்தும் சாம பேத தானங்களுள் அதுமுடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடு உடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தமக்குள் ஒக்குமாகலின். இதனால் வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)

மு.வரதராசனார்: இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

மணக்குடவர்: இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

மு.கருணாநிதி: இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

புலியூர்க் கேசிகன்: செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்

சாலமன் பாப்பையா: ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

நாமக்கல் கவிஞர்: தூங்கிச் செய்ய நினைத்த காரியத்தையும் எதிர்பாராத நல்ல சந்தர்ப்பம் வாய்த்துவிட்டால் உடனே செய்வதுதான் நல்லது, அந்த வாய்ப்பு இல்லாதபோது முன் எண்ணியபடி வாய்ப்புக்காகக் காத்திருந்து தூங்கிச் செய்ய வேண்டும்.

திருக்குறளார் வீ.முனிசாமி: தொழில் செய்யும்போது முடிந்த இடத்தில் எல்லாம் தண்டத்தினால், அதாவது போரினால் செய்தல் நன்று. அது முடியாதபோது மற்ற வழிமுறைகளினால் செய்தல் நல்லது.

சிவயோகி சிவக்குமார்: செய்யமுடிந்ததை எல்லாம் நன்மைக்காக செய்யுங்கள். முடியாததை முடிப்பதற்கான வழி அறிந்து செய்யுங்கள்.

----------------
추천수0
반대수0

공감많은 뉴스 시사

더보기

뉴스 플러스