본문 바로가기
책갈피

티루쿠랄 1178

뽀비키니비... |2026.01.29 09:06
조회 8 |추천 0
티루쿠랄 - 1178
==========================
말: 욕망의 젖
윤리학: 철학
권위: 118. 눈의 질식

가사: 선한 눈을 지키지 않는 자는 악한 눈을 보지 못한다

낭송: 선한 눈을 지키지 않는 자는 악한 눈을 보지 못한다.

--------------

파리멜라자가: 선한 눈을 지키지 않는 자 = 선한 눈을 지키지 않는 자 = 마음으로는 선한 눈을 지키지 않지만, 정신으로는 선한 눈을 지키는 자가 바로 이 자리에 있다.

그리고 그의 눈은 악한 눈을 보지 못한다 = 그 진리가 무슨 소용이 있겠는가? 그의 눈은 그를 보지 못한다, 정말 보지 못하는가?

(동사 '아니다'는 분리를 묘사하는 데 사용되며, 전자는 분리에 대한 두려움과 분노를 표현하는 데, 후자는 '그는 도둑이다'라고 말하는 데 사용됩니다. 'Man'은 어미 모음입니다. 'And'도 어미 모음입니다. 'Oh'는 모음입니다. 이는 눈이 그를 보고 싶어 하지 않는다는 의미입니다. 주어가 콘카나이(Konkanai)라면, 내 눈은 내가 볼 수 없는 콘카나이를 보고 싶어 하지 않습니다. 이런 식으로, 세상에 그를 보고 싶어 하지 않는 사람이 있을까요? 이에 'Man'이라는 모음이 어미 역할을 합니다.)

M. 바라다라자나르: 마음속으로는 원하지 않으면서 말로만 무언가를 원하는 사람이 있습니다. 그의 눈은 그를 보지 않고는 편히 쉴 수 없습니다.

마나쿠다바르: 원치 않는 것을 원하는 사람이 있을까요? 내 눈은 우리를 볼 때는 불안하지만, 아무런 욕망 없이 떠난 사람은 보지 않습니다. 이것이 세상의 종말일까요?

M. 카루나니디: 나를 사랑했지만 진심으로 안아줄 생각은 없었던 사람이 여기 있다. 그를 보지 못해 내 눈은 괴롭다!

풀리유르 케시카나: 마음속에 아무런 욕망도 없이 말로만 사랑을 표현했던 사람이 여기 있다. 그게 무슨 소용이 있겠는가? 그를 보지 못해 내 눈은 괴롭다!

솔로몬 파파이아: 마음으로 사랑하지 않고 말로만 사랑했던 사람은 잘 있을지 모르지만, 그를 볼 수 없어 내 눈은 잠 못 이룬다!

나마칼 시인: 마음으로 사랑하지 않고 거짓 사랑만 했던 사람이 어딘가에 나를 버리고 떠났다. 그런 사람을 볼 수 없어 내 눈은 잠 못 이루고 울부짖는다. 얼마나 어리석은가!

티루쿠랄라르 V. 무니사미: 마음으로 사랑하지 않고 말로만 사랑했던 지도자가 여기 있다. 그 진실이 무슨 소용이 있겠는가? 그를 보지 못해 눈이 가만히 있을 수 있겠는가?

시바요기 시바쿠마르: 누군가 인간관계에서 멀리 떨어져 있다면, 남들이 자신을 보지 못하도록 눈을 감고 있는 것이 아닙니다.

----------------

திருக்குறள் - 1178
=======================
பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 118.கண் விதுப்பழிதல்

குறள்: பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்

வாசிப்பு: பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க் காணாது அமைவில கண்.
--------------

பரிமேலழகர்: பேணாது பெட்டார் உளர்= நெஞ்சத்தால் விழையாது வைத்துச் சொன்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்;
மற்று அவர்க் கண் காணாது அமைவில= அவ்வுண்மையாற் பயன் யாது? அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின.
(செயலாற் பிரிந்து நின்றமையிற் 'பேணாது என்றும், முன்நலம் பாராட்டிப் பிரிவச்சமும், வன்புறையும் கூறினார் ஆகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'ஓ'காரம் அசைநிலை. யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் கொண்கனை என்பது பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாது அமைகின்றனவில்லை; இவவாறே தம்மை ஒருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்து உளரோ என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை.)

மு.வரதராசனார்: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

மணக்குடவர்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?

மு.கருணாநிதி: என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

புலியூர்க் கேசிகன்: உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!

சாலமன் பாப்பையா: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

நாமக்கல் கவிஞர்: என் மீது உண்மையான காதலில்லாமல் என்னுடன் பொய் உறவு காட்டினவர் என்னை விட்டு எங்கேயோ போய் இருக்கிறாராம். அப்படிப்பட்ட அவரைக் காணாமல் உறக்கமின்றி அழுது தவிக்கின்றன என்னுடைய கண்கள். என்ன மடமை.

திருக்குறளார் வீ.முனிசாமி: உள்ளத்தால் விரும்பாமல் வார்த்தைகளினால் மட்டும் விரும்பிய தலைவர் இவ்விடத்திலேயே இருக்கின்றார். அந்த உண்மையால் பயன் யாது? அவரைக் காணாமல் கண்களால் இருக்க முடியவில்லையே?

சிவயோகி சிவக்குமார்: உறவு பேணாமல் விலகி ஒருவர் இருக்கின்றார் என்றால் மற்றவர்கள் காணாதபடி அமைதியாக இருக்கவில்லையே கண்.

----------------


추천수0
반대수0

공감많은 뉴스 시사

더보기

뉴스 플러스