திருக்குறள் - 788
=======================
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 79.நட்பு
குறள்: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
வாசிப்பு: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
--------------
பரிமேலழகர்: உடுக்கை இழந்தவன் கைபோல= அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கைசென்று உதவி அவ் இளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்= நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி, அப்பொழுதே சென்று உதவி, அதனைக் களைவதே நட்பாவது.
(அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ் விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்றப்பட்டது.)
மு.வரதராசனார்: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
மணக்குடவர்: உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.
மு.கருணாநிதி: அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்
புலியூர்க் கேசிகன்: ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு
சாலமன் பாப்பையா: பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
நாமக்கல் கவிஞர்: இடையிற் கட்டிய ஆடை நழுவிவிட்ட ஒருவருடைய கை அவரறியாமலும் உடனே ஆடையை அணைத்து மானங்காப்பதைப் போல நண்பனுக்குத் துன்பம் வந்துவிட்டதை அறிந்து அக்கணமே அவன் கேளாமலும் தானே ஒடி துன்பத்தை நீக்குவதுதான் நட்பாகும்.
திருக்குறளார் வீ.முனிசாமி: ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கைசென்று உதவி செய்து இழிவினை நீக்குவதுபோல, நண்பனுக்குத்துன்பம் வந்தபோது அப்பொழுதே சென்று உதவிசெய்து அதனை நீக்குவதே நட்பாகும்.
சிவயோகி சிவக்குமார்: உடை உடலில் இருந்து விலக்க அதை தடுத்து காக்கும் கை போல் நண்பரின் துன்பம் கண்டு களைப்பதே நட்பு.
----------------
티루쿠랄 - 788
===========================
시: 주제: 우정
윤리: 우정
출처: 79. 우정
구절: 우정은 옷을 잃어버린 손과 같다
낭송: 우정은 옷을 잃어버린 손과 같다.
--------------
Parimelazhaga: 우정은 옷을 잃어버린 손과 같다 = 마치 옷이 찢어진 것처럼, 즉시 가서 도와주고 상처를 치료해 주어야 한다. 상처를 치료해 주는 것이 바로 우정이다. = 옷이 찢어지면 즉시 가서 도와주고 상처를 치료해 주어야 한다. 그리고 그 상처를 치료해 주는 것이 바로 우정이다.
(친구를 보호하기 위해 손을 뻗으면 어려움과 같은 문제를 재빨리 해결해 줍니다. 이는 어려움을 우정에 맡기는 것과 같습니다.)
M. 바라다라사나르: 어려움에 처한 친구를 돕기 위해 손을 뻗는 것처럼, 우정이란 어려움에 처했을 때 즉시 도움을 주는 것입니다.
마나쿠다바: 어려움에 처한 친구에게 손을 뻗어 그를 곤경에서 구해내지 않으려는 것처럼, 우정이란 어려움에 처한 사람을 즉시 도와주고 문제를 해결해 주는 것입니다.
M. 카루나니디: 옷이 벗겨졌을 때 손이 즉시 옷을 고쳐주는 것처럼, 우정의 문법도 그러합니다.
풀리유르그 케시칸: 홍수로 옷을 잃어버린 사람의 손이 즉시 그의 수치심을 가려주는 것처럼, 진정한 우정이란 친구가 고통에서 재빨리 벗어나게 해주는 것입니다.
살로몬 파파이아: 많은 사람들이 옷을 벗었을 때 손이 즉시 뻗어 도움을 주는 것처럼, 우정이란 어려움에 처한 친구를 즉시 찾아가 도와주는 것입니다.
나마칼 시인: 마치 손이 옷에서 미끄러져 벗겨진 사람이 즉시 옷을 껴안고 덮어주듯이, 친구가 고통받는 것을 알면 즉시 달려가 고통을 덜어주는 것이 바로 우정이다.
티루쿠랄라르 V. 무니사미: 옷이 찢어진 사람을 보면 즉시 손을 내밀어 얼룩을 닦아주듯이, 어려움에 처한 친구를 보면 즉시 손을 내밀어 도와주고 그 어려움을 덜어주는 것이 바로 우정이다.
시바요기 시바쿠마르: 마치 옷을 잡아당겨 몸을 보호하듯, 친구의 고통을 더 이상 보고만 있을 수 없을 때 달려드는 것이 바로 우정이다.
----------------