티루쿠랄 - 783
==========================
발: 파트팔
이얄: 나드피얄
아디카람: 79.나드푸
쿠랄: 나빌토룸 누오나얌 폴룸 파일토룸
판푸다이 왈라르 콘탁트
파삿: 나빌토룸 눌타얌 폴룸 파일토룸 (선행을 하는 자는 선하다고 불린다. 두 경우 모두 아침이 다른 아침보다 낫다.
이 두 구절은 이야기의 끝이라고도 한다.)
M. 바라다라사나르: 덕 있는 사람과의 우정은 책의 좋은 내용을 공부하는 것과 마찬가지로 즐거움의 원천이다.
마나쿠다바바르: 덕 있는 사람과의 우정은 읽을 때마다 지식을 주는 책과 같고, 교류할 때마다 지식을 주는 책과 같습니다. 이것을 덕 있는 사람과의 우정에서 얻는 지식이라고 합니다.
M. 카루나니디: 선량한 사람들 사이의 우정은 읽는 재미가 있는 책처럼 즐겁습니다.
풀리유르그 케시칸: 인품이 좋은 사람들 사이의 관계는 읽는 재미가 있는 책처럼 즐겁고, 교류하는 재미가 있는 책처럼 즐겁습니다.
살로몬 파파이아: 책을 읽는 동안 모든 것이 즐거워지듯이, 선량한 사람과의 우정은 교류할 때마다 항상 즐겁습니다.
나마칼 시인: 선량한 사람들 사이의 우정은 좋은 책을 읽을수록 즐거움이 커지듯, 즐거움이 커져갑니다.
티루쿠랄라르 V. 무니사미: 선량한 사람들 사이의 우정은 교류할 때마다 즐거움이 커지듯, 좋은 책을 읽을수록 즐거움이 커지는 것과 같다.
시바요기 시바쿠마르: 읽는 책과 같은 자질을 지닌 사람들, 그리고 교류하는 사람들과 같은 자질을 지닌 사람들 사이의 관계.
----------------திருக்குறள் - 783
=======================
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 79.நட்பு
குறள்: நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
வாசிப்பு: நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
--------------
பரிமேலழகர்: பண்புடையாளர் தொடர்பு பயில்தொறும்= நற்குணமுடைய மக்கள், தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம்செய்தல்; நூல் நவில்தொறும் நயம்போலும்= நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும்.
(நயம் செய்தலான், நயம் எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக்கொருகால் மிகும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)
மு.வரதராசனார்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
மணக்குடவர்: படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு. இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.
மு.கருணாநிதி: படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு
புலியூர்க் கேசிகன்: நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்
சாலமன் பாப்பையா: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
நாமக்கல் கவிஞர்: நல்ல குணமுடையவர்களுடைய நட்பு பழகப் பழக இன்பம் அதிகரிக்கும், எப்படிப் போல் என்றால் படிக்கப் படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பது போல்.
திருக்குறளார் வீ.முனிசாமி: நற்குணமுடைய மக்கற் தமக்குள் செய்த நட்பு பழகுந்தோறும் அவர்க்கு இன்பம் செய்தலாவது நூற்பொருளைக் கற்குந்தோறும் அந்நூலானது கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும் என்பதாம்.
சிவயோகி சிவக்குமார்: படிக்கும் பொழுதெல்லாம் வளர்க்கும் நூலின் தன்மைப்போல் பழகும் பொழுதெல்லாம் வளர்க்கும் பண்புடையவர்களின் தொடர்பு.
----------------