https://m.dcinside.com/board/neostock/6954286시: 주제
윤리: 정치
권력: 57. 무행동
시: 만약 거친 말이 나온다면, 그의 재산은 영원하지 않고 사라질 것이다.
읽기: 만약 거친 말이 나온다면, 그의 재산은 영원하지 않고 사라질 것이다.
--------------
파리멜라자가: 만약 거친 말이 나온다면, 그의 재산은 영원하지 않고 사라질 것이다. = 만약 왕이 말과 표정이 거칠다면, 그의 재산은 영원하지 않고 사라질 것이다. ("그는 이와 같이 거친 말과 사냥, 거친 언행, 도박, 그리고 탐욕과 같은 행위에 대한 가혹한 처벌을 억제했습니다." 여기서 '눈'이라는 단어가 사용되었습니다. 이러한 행위들은 사라지지만, 설령 사라진다 하더라도 작은 것에 불과하다고 여겨지며, '오래가는 부'는 오래 지속된다고 합니다.)
M. 바라다라: 거친 말을 하고 비전이 없는 사람의 큰 재산도 오래가지 못하고 순식간에 사라질 것입니다.
마나쿠다바: 만약 왕이 거친 말을 하고 비전이 없다면, 가문에서 물려받은 그의 재산도 오래가지 못하고 순식간에 사라질 것입니다. 이는 감소가 아니라 완전한 손실입니다.
M. 카루나니디: 냉혹하고 무자비한 자의 막대한 재산도 오래가지 못하고 사라질 것이다.
풀리유르 케시크: 말씨가 거칠고 무자비한 왕의 막대한 재산도 오래가지 못하고 곧 소멸할 것이다.
솔로몬 파파이아: 말씨가 거칠고 무자비한 정부의 막대한 재산도 늘어나지 못하고 사라질 것이다.
나마칼 시인: 말씨가 거칠고 성격이 불친절하고 무자비한 사람은 아무리 재산과 영향력이 크더라도 오래가지 못하고 곧 사라질 것이다.
티루쿠랄라르 V. 무니사미: 말씨가 거칠고 비전이 없는 왕은 막대한 재산도 오래가지 못하고 곧 소멸할 것이다.
시바요기 시바쿠마르: 말씨가 거칠고 눈빛이 불친절한 사람의 가장 큰 재산도 오래가지 못하고 사라질 것이다.திருக்குறள் - 566
=======================
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57.வெருவந்த செய்யாமை
குறள்: கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
வாசிப்பு: கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.
--------------
பரிமேலழகர்: கடும் சொல்லன் கண் இலன் ஆயின் = அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலன் ஆயின்; நெடுஞ் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் = அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
("வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள் ஈட்டங்கட் காமமோ டேழு" எனப்பட்ட விதனங்களுட் கடும் சொல்லையும், மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடும் சிறுமைத்துஅன்று ஆயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்- நீட்டித்தல்.)
மு.வரதராசனார்: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
மணக்குடவர்: அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும். இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.
மு.கருணாநிதி: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்
புலியூர்க் கேசிகன்: கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்
சாலமன் பாப்பையா: சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.
நாமக்கல் கவிஞர்: கடூரமான வார்த்தைகளும் தயவு தாட்சண்யமில்லாத குணமும் உள்ளவனாயின் அவனுடைய செல்வமும் செல்வாக்கும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நெடுநாளைக்கு இருக்காது விரைவில் அழிந்து போகும்.
திருக்குறளார் வீ.முனிசாமி: அரசன் கடிய சொல்லினையுடையவனாகவும், கண்ணோட்டம் இல்லாதவனாகவும் இருந்தால், அவனுடைய பெரிய செல்வம் நீடுதலில்லாமல் அப்பொழுதே கெடும்.
சிவயோகி சிவக்குமார்: கடுமையான வார்த்தையும், கருணையற்ற பார்வையும் உடையவனின் அதிகபட்ச செல்வம் நீண்ட நாள் நிலைக்காமல் அழியும்.
----------------